Friday 25 March 2011

3 முதலமைச்சர்கள் சொத்துக் கணக்கு....

திருவாரூர் தொகுதியில் முதல்வர் கருணாநிதி போட்டியிடுகிறார். ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா நிற்கிறார். இருவரும் வேட்பு மனுவுடன் தங்களது சொத்துக்கள் குறித்த விவரத்தையும் இணைத்துள்ளனர்.

இந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் இருவருக்குமே சொத்து மதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது.

கருணாநிதியின் சொத்து மதிப்பு விவரம்:

கருணாநிதி பெயரில் ரொக்கம்மாக 15 ஆயிரம் ரூபாய். அவரது மனைவி தயாளு அம்மாள் பெயரில் 30 ஆயிரம் ரூபாய், துணைவி ராஜாத்தி பெயரில் 2 லட்சம் ரூபாய் உள்ளது.

வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 4 கணக்குகள் உள்ளன. இதில் 5 கோடியே 13 லட்சத்து 49 ஆயிரத்து 152 ரூபாய். அடையாறு கரூர் வைசியா வங்கியில் 13 லட்சத்து 74 ஆயிரத்து 664 ரூபாய்.

கர்நாடகா வங்கியில் 39 லட்சத்து 62 ஆயிரத்து 995 ரூபாய். ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் 10 ஆயிரத்து 958 ரூபாய். சென்னை மகாலிங்கபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 11 ஆயிரத்து 135 ரூபாய்.

கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 11 லட்சத்து 39 ஆயிரத்து 441 ரூபாய். ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 180 ரூபாய் என, மொத்தம் 5 கோடியே 91 லட்சத்து 63 ஆயிரத்து 5,256 ரூபாய். 22 பைசா வங்கிக் கணக்கில் பணம் வைத்துள்ளார்.

அஞ்சுகம் பதிப்பகம் என்கிற பங்குதாரர் நிறுவனத்தில் 50 சதம் பங்குகள் 78,330 ரூபாய். இந்த நிறுவனத்திற்கு சென்னை, 180/93, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சொந்தான கட்டடம் மற்றும் நிலம். கோபாலபுரம் 15-4வது குறுக்குத்தெருவில் அஞ்சுகம் அம்மாள் அறக்கட்டளைக்கு செட்டில்மென்ட் செய்யப்பட்ட 6 ஆயிரத்து 162 சதுர அடி மனை மற்றும் அதில் உள்ள கட்டடம். அறக்கட்டளை சொத்து ஆயுட் காலம் அனுபவ பாத்தியம் உள்ளது. தஞ்சை மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் (சர்வே எண் 29, 30/2, 31/2ஏ) 14.30 ஏக்கர் நிலம். இதற்கான மதிப்பு 4 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 855 ரூபாய். இதன் மூலம் அவரது பெயரில் 10 கோடியே 84 லட்சத்து 20 ஆயிரத்து 380 ரூபாய். அவருக்கு திரைப்படம் எடுக்க மும்பையில் மோசர்பேரிடம் 10 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கிய வகையில் கடன் உள்ளது என தெரிவித்துள்ளார். வருமான வரி 37 லட்சத்து 34 ஆயிரத்து 20 ரூபாய் கட்டியுள்ளார்.

அசையும் சொத்து மதிப்பில், மனைவி தயாளு பெயரில் கலைஞர் "டிவி' நிறுவனத்தின் பங்குதாரர் என்ற வகையில், 6 கோடி ரூபாய் உட்பட 15 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 363 ரூபாய். அசையா சொத்துகள் 5 லட்சத்து 22 ஆயிரத்து 635 ரூபாய். இது தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பாக 5 லட்சத்து 51 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

துணைவியார் ராசாத்தி பெயரில் அசையும் சொத்துகள் 20 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 924 ரூபாய். அசையா சொத்துகள் 3 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 318 ரூபாய். இதற்கு தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628 ரூபாய்.

ராசாத்தி தனது மகள் கனிமொழியிடம் இருந்து, பற்றில்லாக் கடனாக வாங்கிய ஒரு கோடியே ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 503 ரூபாய் கடன் உள்ளது என சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் சொத்து குறித்த முழு விவரம்:- ரொக்கக் கையிருப்பு - ரூ. 25,000.

- பல்வேறு வகையான வங்கி நிரந்தர வைப்புத் தொகை, சேமிப்பு கணக்கு டெபாசிட், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் டெபாசிட் மொத்தம் ரூ. 2 கோடி மதிப்பில்.

இவை அனைத்தும் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்து நீதிமன்றப் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது.

- பாண்டுகள், நிறுவனங்களில் பங்கு முதலீடு ரூ. 50,000. இவையும் கோர்ட் பொறுப்பில் உள்ளன.

- சொந்தமாக வைத்துள்ள வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ. 8.35 லட்சம்

- நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் விவரம்:

1. ஸ்ரீ ஜெயா பப்ளிகேஷன்ஸ் - ரூ. 8.5 கோடி.
2. சசி எண்டர்பிரைஸஸ் - ரூ. 75 லட்சம்.
3. கோட நாடு எஸ்டேட் - ரூ. 1 கோடி.
4. ராயல் வேலி புளோரிடெக் எக்ஸ்போர்ட் - ரூ. 65 லட்சம்.

நிறுவனங்களில் செய்துள்ள மொத்த முதலீட்டின் அளவு ரூ. 10.9 கோடி.

ஜெயலலிதாவின் அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 13 கோடியே 03 லட்சத்து 27 ஆயிரத்து 979.

அசையாச் சொத்துக்கள் விவரம்

வேளாண் நிலம்:
ஆந்திர மாநிலம், குத்துபுல்லாபுர் மாவட்டம், ஜிடிமேட்லா கிராமத்தில் 14.5 ஏக்கர். வாங்கிய தேதி: 10.06.1968 மற்றும் 25.10.168. வாங்கிய போது நிலத்தின் மதிப்பு 1,78,313 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயார் பெயரால் வாங்கப்பட்டது). தோராயமான இன்றைய சந்தை மதிப்பு 11.25 கோடி ரூபாய்.

- செய்யூர் கிராமத்தில் 3.43 ஏக்கர். வாங்கிய போது நிலத்தின் மதிப்பு 17,060 ரூபாய். வாங்கிய தேதி: 16.12.1981. தோராயமான இன்றைய சந்தை மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய்.

- 79 போயஸ் கார்டன், சென்னையில் 1.5 கிரவுண்ட். வாங்கிய தேதி: 30.07.1991. வாங்கிய போது மதிப்பு: 10.2 லட்சம் ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: 3.24 கோடி ரூபாய்.

- 8-3-1099 மற்றும் 8-3-1099ஏ, ஸ்ரீநகர் காலனி, ஹைதராபாத் என்ற முகவரியில் 651.18 சதுர மீட்டர் கட்டிடம். வாங்கி தேதி: 11.02.1967. வாங்கி போது மதிப்பு: 50 ஆயிரம் ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 3.5 கோடி ரூபாய்.

- ஜி.ஹெச்.18, தரைத்தளம், பர்சன் மேனர், சென்னையில் 180 சதுர அடி. வாங்கிய தேதி: 3.4.1990. வாங்கிய போது மதிப்பு: 1,05,409 ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: நான்கு லட்சம் ரூபாய்.

- எண்: 213-பி, செயின்ட் மேரிஸ் ரோடு, மந்தவெளி, சென்னையில் 1206 சதுர அடி. வாங்கிய தேதி: 10.07.1989. வாங்கிய போது மதிப்பு: 3,60,509 ரூபாய். தற்போதை சந்தை மதிப்பு: 35 லட்சம் ரூபாய்.

குடியிருப்பு கட்டடங்கள்:

- 81 போயஸ் கார்டன், சென்னையில் 10 கிரவுண்ட். வாங்கிய போது மதிப்பு 1,32,009 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயாரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 20.16 கோடி ரூபாய். அசையாச் சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு மொத்தம் 38 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்.

ஜெயலலிதாவிடம் கடன் நிலுவை எதுவும் இல்லை.

நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றப் பொறுப்பில் உள்ளது என கூறப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு குறிப்பிடப்பட வில்லை.

மொத்தமாக, ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மதிப்பு ரூ. 51,40 ,67,979 ஆகும்.

கேரள முதல்வர் அச்சுதானந்தன் சொத்துக் கணக்கு

கேரள முதல்வர் அச்சுதானந்தன்(87) வேட்பு மனு தாக்கலின்போது வேட்பு மனுவுடன் சேர்த்து சொத்துக் கணக்கு விவரத்தையும் சமர்பித்துள்ளார். வரும் தேர்தலில் அவர் மலம்புழா தொகுதியில் போட்டியிடுகிறார்.

கையில் ரூ. 3 ஆயிரமும், வங்கி சேமிப்பில் ரூ. 80 ஆயிரத்து 295 உள்ளதாம். கடந்த 2009-10-ம் ஆண்டிற்கான வரிமான வரி செலுத்தியதின்படி அவரது வருமானம் ரூ. 3 லட்சத்து 43 ஆயிரத்து 994.

அரசு ஓய்வூதியம் பெறும் அச்சுதானந்தன் மனைவி வசுமதி கடந்த 1982-ம் ஆண்டு ரூ. 18 ஆயிரம் கொடுத்து ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பரவூரில் 10 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். தற்போது அதன் மதிப்பு ரூ. 1 லட்சம். மேலும் அவரிடம் ரூ. 1 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலான 100 கிராம் தங்க நகைகள் இருக்கிறது.

வசுமதியின் கையிருப்பில் ரூ. 10 ஆயிரமும், வங்கி சேமிப்பில் ரூ. 5 லட்சத்து 70 ஆயிரத்து 635-ம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் கைரலி தொலைக்காட்சியை நடத்தும் மலையாளம் கம்யூனிகேஷன்ஸில் ரூ. 5 ஆயிரத்திற்கு பங்குகளும் உள்ளன.

-Thanks to Thatstamil.com

Friday 25 February 2011

''மாற்றம் வந்தாத்தானே மக்களுக்கு பெனிஃபிட்டு!''

ஒரு கலைஞனின் ஆதங்கம் -  தங்கர்பச்சான்
சினிமாவுல நடிக்க வந்தவங்க எல்லாம் நாட்ட ஆண்டுக்கிட்டு இருக்காங்க. எதிர்காலத்துல ஆளுறதுக்கு நிறைய சினிமா நடிகர்கள் தயாராயிட்டும் இருக்காங்க. ஆனா, நம்மளோட தாய்க் கலையை, நம்ம மக்களோட கலைகளை, இந்தத் தமிழ் நாட்டு அரசாங்கமும் ஆதரிக்காம, மக்களும் ஆதரிக்காம மொத்தமா அழிஞ்சுபோச்சு. காலங்காலமா தமிழுக்கு உயிர் கொடுத்துட்டு வந்த அந்தக் கலைகளும், கலைஞர்களும் தேய்ந்து போய்ட்ட இந்த நிலையில... அத்திப் பூ மாதிரி எங்கேயோ ஒரு கிராமத்துல, ஏதோ ஓர் இடத்துல, தங்களோட உயிரைக் காப்பாத்திக்கிறதுக்காக... இன்னமும் அதே கலையில கிடந்து, எஞ்சியுள்ள கலைஞர் கள் போராடிட்டு இருக்காங்க.
யாராலயும் கண்டுக்கப்படாம, கால் வயித்துக்கே கஞ்சி இல்லாம, உண்மையான கலைத் தொழில் செஞ்சு போராடிட்டு வர்ற ஒரு தமிழ்நாட்டு தெருக் கூத்துக் கலைஞனைச் சில நாளைக்கு முன், நான் என் கிராமத்துக்குப் போனப்ப சந்திச்சேன். தெருவுல நடந்து போயிட்டு இருந்தப்ப, என்ன அடையாளங் கண்டு எதிரில் வந்து பேச்சு கொடுத்தாரு. அவரு பேரு சங்கர். எல்லாருகிட்டயும் பேசற மாதிரிதான் அவருகிட்டயும் பேசுனேன். ஆனா, அந்தப் பேச்சு கடைசியா எங்கேயோ போய் முடிஞ்சிருக்கு. இந்த ஒரு தமிழன் என்கிட்ட பகிர்ந்துகிட்டதுதான் இப்ப தமிழ்நாட்டுல இருக்குற எல்லாத் தமிழனோட மனநிலையா இருக்கும்னு புரிஞ்சிக்கிட்டேன். அந்தத் தெருக் கூத்துக் கலைஞன், என்னோடு பகிர்ந்துகிட்டத உங்களோடயும் பகிர்ந்துக்கிடலாம்னு தோணுச்சு.

''உங்களுக்குச் சாப்பாடு எல்லாம் எப்பிடி?''
''சாயங்காலம் அஞ்சு மணிக்கு எல்லாம் கூத்து கட்டுற ஊர்ல வந்து சேர்ந்திடுவோம். நைட் எங்களுக்கு நாட்டுக் கோழி அடிச்சு ரசம் வெச்சுக் கொடுப்பாங்க. தொண்டைக்கு நல்லது. சில ஊர்ல என்ன இவனுங்க கூத்தாடிதானேன்னு வெறும் சாம்பார் ஊத்திடுவாங்க. அன்னிக்கு தொண்டை கட்டிக்கும். கூத்தாட சிரமமா இருக்கும். வாயைத் தொறந்து கேட்கவும் முடியாது. விவரம் தெரியாதவங்க 'கோழிக் கறிக்கு அலையறானுங்க பாரு’ன்னு எகத்தாளம் பேசுவாங்கன்னு விட்ருவோம். நைட்டு ஆடி முடிச்சதுக்கப்புறம் மக்கியா நாளு காலையில டிபன் சாப்பாடு, முந்திரிச் செடி, தென்னமரம், மாமரம்னு பார்த்துத் தூங்கி எழுந்துக்குவோம். சம்சாரிங்க வீடுகள்ல தூங்க இடங் கொடுக்க மாட்டாங்க. கூத்தாடிங்க இங்க தூங்கக் கூடாதுன்னு சொல்லிடுவாங்க. நாங்க ஆடி முடிச்ச பின்னதான் எங்களுக்குப் பணம் அம்போகம் பண்ணுவாங்க. அதுவும் நாங்க நல்லா ஆடுனாத்தான் கொடுப்பாங்க. இல்லன்னா, என்ன நீங்க ஆடிக் கிழிச்சீங்கன்னு எகத்தாளமும் பேசுவாங்க!''

''வேசமாடுறப்ப தப்பு செஞ்சிட்டா சனங்களுக்குத் தெரியாம இருக்கணுங்கறதுக்காக உங்களுக்குள்ள நீங்க சூசகமா சொல்லிக் கூப்பிட்டுக்கிற பேருங்கள சொல்லுங்க?''
''அதா சார்! தாளக்காரருக்கு நெண்டிக் காலு, மத்தளக்காரருக்கு தமிக்காலு, தலை வேஷக்காரருக்கு ராஜபார்ட் இல்ல, தன தம்பம்னு சொல்வோம். பெண் வேஷக்கார ருக்கு ராலு பந்தம். அரவேசக்காரருக்குகெஜக் கால், நாரதர் வேஷக்காரருக்கு முந்திரிக் கால், காலுன்னா ஆளுன்னு அர்த்தம். ஈஸ்வரன் வேஷக்காரருக்கு கஞ்சாப் பணிக்கர், கிருஷ்ணன் வேஷக்காரருக்கு மேசக்காலு, பாட்டுக்காரருக்கு வாகறை, வசனக்காரருக்கு நச்சு, பெட்டி தூக்குறவருக்கு நெமிலிக் காலு, மூட்டை தூக்குறவருக்கு மந்தால்காரருன்னு பேரு. 'ஏய் மூட்ட தூக்குறவரே’ன்னு கூப்பிட்டா அவருக்கு அசிங்கமாப் பூடும் இல்லையா அதனால. இந்த மாதிரி எங்க பாஷையில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பேரு இருக்குதுங்க சார்!''

''வேஷங் கட்டுற பொருளுங்க என்னெல்லாம்? அதுங்களோட பேரச் சொல்லுங்க?''
''கவக்குச்சி, நெஞ்சுக்கு மார்பதக்கம்,  இதெ 'கேப்பு’ன்னும் சொல்லுவோம். துணிக்கு கெந்தன்னு சொல்லுவோம். அரிதாரம்னு சொல்ற பொருளுங்க இருக்கு. அதுல நீலம், சிவப்பு, வெள்ளை, கறுப்புன்னு கலரு பொடிங்க இருக்கும். ஜிகினாவையும் தடவிக்குவோம்.''

''தெருக் கூத்தை நகரத்துக்காரங்க எப்புடிப் பாக்குறாங்க?''
''கிராமத்தைவிட டவுன்லதான் மரியாதை அதிகம். பாண்டிச்சேரிக்குப் போயிட்டோம்னா, எங்கள சினிமா ஸ்டாராட்டம் பாக்குறாங்க. பாண்டியிலதான் எங்களுக்கு உண்மையாலுமே மரியாதை கிடைக்குது. கலையை மதிக்கிறசனங்க அங்க அதிகம். மெட்ராஸ்ல ஒரு முறை ஆடினோம். லேடீஸ் எல்லாரும் ஆர்வமாப் பாத்தாங்க. கர்ண மோட்சத்துல பொன்னுருவி வேஷத்துல நான் ஆடுறேன். எல்லாரும் காசு குத்திக் கை தட்டி ஆர்வப்படுத்துறாங்க. கிராமத் துக்காரங்க இதே ஆர்வத்தக் காட்டுனா கூத்து எங்கேயோ போயிடும்! கிராமத்துக்காரங்க சினிமா மேல மோகமா இருக்குற மாதிரி நகரத்துக்காரங்க கூத்து மேல ஆர்வமா இருக்காங்க!''

''அரசாங்கம் உங்களுக்கு இன்னும் என்ன சலுகைகள் செய்யணும்னு நினைக்கிறீங்க?''
''பஸ்ல போவும்போது இலவசமா டிக்கெட் கொடுத்து, கூத்துக்காரங்களுக்கு நல்ல மரியாதை கிடைக்குற மாதிரி செஞ்சிட்டாங்கன்னா, அதுவே பெரிய விஷயம் சார். இலவச அரிசி, புடவைன்னு குடுக்குற மாதிரி கூத்தாடுறவங்களுக்கு, அதுவும் பெண் வேஷம் கட்டுறவங்களுக்கு டோப்பா, கவரிங் நகைங்கன்னு இலவசமாக் கொடுத்தாங்கன்னா, நல்லா இருக்கும். ஒரு டோப்பா வாங்கணும்னா, ரெண்டாயிரம் ஆகுது. அதுபோல கவரிங் நகைங்களும் வேணும். இது ரெண்டையும் தமிழ்நாடு முழுக்க இருக்குற கூத்துக்காரங்களுக்கு இலவசமாக் கொடுத்தாங்கன்னா, ரொம்ப சந்தோசப்படுவோம்!''
''கூத்தாடுறவங்களுக்குப் பொண்ணு கிடைக்குறது ரொம்ப சிரமமாமே, அது நிஜமா?''
''என் சேக்காளி ஒருத்தன் நல்லா வேஷமாடுவான். இப்ப அவன் வேஷமாடுறது இல்ல. கூப்பிட்டா, கல்யாணம் பண்ணிக்கிற வரைக்கும் நான் வரலடான்னு சொல்லிட்டான். அவங்க அப்பா- அம்மாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்கியாவது போடான்னு சொல்லிட்டாங்க. சனங்களும் பெண் வேஷம் கட்டுறவங்களுக்கு கூத்தாடின்னும், ரெண்டுங்கெட்டான்னும் சொல்லி... பொண்ணு தர்றதில்ல. நாங்க உண்மையில அப்படி ஒண்ணும் கிடையாது. நான் சூரன் வேஷம் கட்டுனா சூரனாவே மாறிடுவேன். பொடவையக் கட்டுனேன்னா சுபத்ரையா மாறிடுவேன். பொடவைய இடுப்புல சொருவுனவுடனே, பொண்ணுக்கான அத்தன அம்சமும் ஒடம்புல வந்து பூந்துக்கும். இந்தக் கலையை எப்படி எங்களால மறக்க முடியும்?''

''கூத்து ரொம்ப நீளமா இருக்குது. புதுசாப் பாக்குறவங்க பாதியிலயே எழுந்து போயிடறாங்கன்னு சிலரு குறை சொல்றாங்களே. கூத்த சுருக்க முடியாதா?''
''அப்பிடி ஒரு கதையைப் பொசுக்குனு முடிக்க முடியாது சார். அதெ அப்பிடி லேட்டஸ்ட்டாப் பண்ணோம்னா, பழைய காலத்து ஆளுங்க எங்கள கன்னாபின்னான்னு திட்ட ஆரம்பிச்சுடுவாங்க. ஆனா, கூத்துக் கலையை வளர்க்கிறதுக்கு ஏதாவது யோசிக்கணும்!''

''உங்களுக்குப் பிடிச்ச சினிமா நடிகர் யார்?''
''எனக்கு பழைய நடிகர்கள்ல எம்.ஜி.ஆர் பிடிக்கும்! நானும் ஒரு ஆக்டர்ங்கற முறையில அவரோட ஸ்டைலு, ஆக்டிங், சிரிப்பு, அவருடைய வசனங்கள் எல்லாம் மக்களைத் திருத்துற மாதிரி இருக்கும். அவரு மக்களுக்கு செஞ்ச மாதிரி இப்ப இருக்குறவங்க, எல்லாரும் செஞ்சா நாடு முன்னேற்றப் பாதையில போகும். அதே மாதிரி சிவாஜியோட நடிப்புத் திறமை எனக்குப் புடிக்கும். இந்தக் காலத்துல, கமல்ஹாசன் புடிக்கும். சூர்யாவை எனக்கு ரொம்பப் புடிக்குது. அதே மாதிரி ரஜினியை ரொம்பப் புடிக்கும். அவரோட எளிமை புடிக்கும்!''

''ஒரு தெருக் கூத்துக் கலைஞர் என்பதெல்லாம் தாண்டி, ஒரு குடிமகனா இந்த நாட்டுல உங்களுக்கு என்ன குறை இருக்குதுன்னு நினைக்கிறீங்க. அரசாங்கம் அறிவிச்சிருக்கிற திட்டத்துல எது உங்களுக்குப் பிடிச்சிருக்கு?''
''ஸ்டவ் அடுப்பு, டி.வி இதெல்லாம் ஆடம்பர வாழ்க்கை. டி.வி இருக்க வேண்டியதுதான். ஆனா, அரசாங்கம் கொடுத்து பார்க்கக் கூடாது. டி.வி எல்லாருக்கும் கொடுக்குறாங்க. என் வீட்லயும் வெச்சிருக்கேன். புள்ளைங்க எல்லாம் டி.வி-லயே ஐக்கியமாயிடுதுங்க. என் சின்னப் புள்ளைக்கு ஆறு வயசுதான் ஆவுது. அது சொல்லுது, 'அப்பா... இந்தப் படத்த ஏற்கெனவே போட்டுட்டாங்கன்னு. இந்த இடத்துல இது வருதுன்னு சொல்லுது. அறிவு வளர்ச்சி இருக்குது. ஆனா, அந்த அறிவு அன்னாடங்காய்ச்சி பொழப்பு நடத்துறதுக்கான அறிவு கிடையாதுங்க. பொழப்பக் கெடுக்குற அறிவாத்தான் இருக்குது!

டி.வி-யை இலவசமா ஏன் கொடுக்கக் கூடாதுன்னு சொல்றேன்னா... ஒரு திட்டம் கிறது மக்களுக்கு பெனிஃபிட்டா இருக்கணும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் கொண்டுவந்தாரு. அது மறக்கமுடியாத திட்டம். இப்ப கலைஞர், இலவச டி.வி திட்டம் கொண்டுவந்திருக்காரு. அடுத்து, அம்மா வந்தாங்கன்னா, அந்தத் திட்டம் போயிடும். ஆனா, யாரு வந்தாலும் சத்துணவுத் திட்டத்தை நிறுத்த முடியாது. எந்த ஆட்சியில திட்டம் போட்டாலும் அந்தத் திட்டம் மக்களுக்கு எல்லாக் காலத்துக்கும் பயன்படற மாதிரியான திட்டமா இருக்கணும். அதுதான் நல்ல திட்டம்.

முதலமைச்சரா இருக்குறவங்க வறுமைக் கோட்டுக்குக் கீழ இருக்குறவங்க என்னென்ன கஷ்டத்துல இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கணும் சார். கவர்மென்ட்ல இருக்குறவங்க 20, 30 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்க. ஆனா,வறுமைக் கோட்டுக்குக் கீழ இருக்குறவங்க? லோன் கொடுக்கறது, வங்கியில கடன் தள்ளுபடிசெய்யு றது எல்லாம் இருக்குறவங்களுக்குத்தான் சார் பயன்படுது. எங்கள மாதிரி ஆளுங்க பேங்க்ல கடன் கேட்டா, கா காணி, அரைக் காணி நிலத்த வெச்சிக்கிட்டு கடன் கேக்க வராதீங்கன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லி அனுப்பிடு றாங்க. 10, 20 ஏக்கர் நிலத்துக்காரங்களுக்கு லோனும் தந்து கடனும் தள்ளுபடி பண்றாங்க. இதனால கவர்மென்ட்டுக்குத்தான்  நஷ்டம்!''

''பொதுவா அரசியல்வாதிங்களை மக்கள் எப்புடிப் பாக்குறாங்க?''
''இப்ப இருக்குற அரசியல்வாதிங்க மக்களுக்குச் செய்றாங்க சார். எதுவுமே செய்யலன்னு சொல்லிடக் கூடாது. ஆனா, அவுங்க செய்யிற எல்லாமே வசதி படைச்சவங் களுக்குத்தான் சார்.
ஏழைங்களுக்கு எதுவுமே வந்து சேரல. கலைஞர் வந்தாரு அஞ்சு வருசம் இருந்தாரு. அம்மா வந்தா அவரவிட அதிகமா செய்வாங் கன்னு மாத்திப் போடலாம்னு நினைக்கு றோம். மாற்றம் வந்தாதானே மக்களுக்கு பெனிஃபிட்டு!''

''மதுக் கடையை அரசாங்கம் வெச்சிருக்கணுமா தூக்கிடணுமா?''
''மதுக் கடைய யாரு நினைச்சாலும் தூக்கிட முடியாது சார். நிறுத்தவும் முடியாது. முன்னெல்லாம் பிரசவ வலி வராம இருக்குற துக்குப் பயன்படுத்துன விஷயங்களைப் போட்டு சாராயம் காய்ச்சுனாங்க பெரியவங்க. அதனால, அவங்க வாழ்க்கை பாதிப்பு இல்லாம இருந்தது. இப்ப கடையில விக்கிறது எல்லாம் கெமிக்கல் பவுடர்தான் சார். உடம்புக்குக் கெடுதிதான். இப்ப ஒயின்ஸ் ஷாப்புலயே மூடியக் கழட்டிட்டு கலப்படம் பண்ணி விக்கிறாங்க. ஒரு கோட்டர் குடிச்சாப் போதும். இப்ப ரெண்டு கோட்டர் போட்டாலும் பத்தலை. இப்பிடி எல்லாம் நடக்குது. இதெல்லாம் கெட்டதுதான் சார்.

சாராயக் கடையை மூடினா... வன்முறை, கற்பழிப்பு, எதுவும் இருக்காது. மனுசன் நல்ல மாதிரியா இருப்பான். 'ஆட்சிக்கு நாங்க வந்தா, சாராயக் கடைய எடுத்துடறோம்’னு சொல்ற கட்சிய கண்டிப்பா தாய்மார்கள் ஆதரிப்பாங்க. நம்ம பக்கம் கள்ளச் சாராயத்தை ஒழிச்ச மாதிரி, டாஸ்மாக்கை ஒழிச்சிட்டாங்கன்னா... நாட்டுக்கு நல்லது.
ஒரு வருஷத்துக்கு கண்ணுல காட்டுலன்னா, குடிகாரன் தானே திருந்திடுவான் சார். நான் ஒரு ஆறு மாசம் குடிக்காம இருந்ததனால, ரெண்டு பவுன் நகை எடுத்துச்சு சார் என் வீட்டுல. கூத்துக்குப் போன பிறகு குடிக்க ஆரம்பிச்சி, இப்ப 25 ஆயிரத்துக்கு கடனாளியா இருக்கேன் சார். அதை எப்ப அடைக்கப் போறேனோ தெரியல. நான் உங்கள சந்திச்சேங்கிற முறையில, தங்களோட ரசிகன்ங்கற மரியாதையில நான் என் குடிப் பழக்கத்த இன்னிக்கோட விட்டுர்றேன் சார்!''

நன்றி விகடன்....

Tuesday 15 February 2011

தினமணி தலையங்கம்: யுகப் புரட்சி!

8 நாள்கள் நடந்த குருúக்ஷத்திரப் போரைப்போல, உலகை உலுக்கிய இந்த 18 நாள்களும் தலைமுறை தலைமுறையாகப் பேசப்பட இருக்கிறது. மக்கள் சக்தியால் ஒரு சர்வாதிகார ஆட்சியைப் பதவியிலிருந்து அகற்ற முடியும் என்பதை எகிப்து மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். அன்று அண்ணல் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் அடக்குமுறையையும், நிறவெறியையும் எதிர்த்துப் போராட உலகுக்கு அளித்த "அஹிம்சை' என்கிற ஆயுதம் இன்று உலகமெல்லாம் வெற்றிவாகை சூடி வருகிறது.

தெருக்களில் இறங்கி சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராகச் சில நூறு இளைஞர்கள் எழுப்பிய கோஷம் பல நூறு பேரை ஈர்த்தது. பல நூறு பேர்களின் ஊர்வலம் பல்லாயிரம் பேர்களின் ஆதரவுடன் ஒரு மிகப்பெரிய புரட்சியாக உருவெடுத்தது.
 
தான் ஒரு துணை அதிபரை நியமிப்பதாக அறிவித்தார் முபாரக். கூட்டம் கலையவில்லை. செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். ஊஹும், மக்கள் மசியவில்லை. இணையதளம், தொலைக்காட்சி, மொபைல் என்று தகவல் தொடர்புகளைத் துண்டித்துப் பார்த்தார். பயனில்லை.
 
தன்னுடைய ஆதரவாளர்களைக் கூட்டத்தினர் நடுவில் ஊடுருவவிட்டுக் கருத்து வேறுபாட்டை உருவாக்க நினைத்தார். முயற்சி பலிக்கவில்லை. கலவரத்தைத் தடுக்க அனுப்பிய காவல்துறை தோல்வியைத் தழுவித் திரும்பியபோது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. தெருவில் இறங்கிப் போராட வந்த கூட்டம், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முற்பட்டது. ராணுவ டாங்குகள் கடந்து செல்லப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வழியேற்படுத்திக் கொடுத்தனர். சிலர் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு அருங்காட்சியகங்களையும், அரசு அலுவலகங்களையும் வீடுகளையும் சூறையாட முற்பட்டபோது, அவர்கள் களையெடுக்கப்பட்டனர்.
 
இத்தனைக்கும், இந்த மக்கள் புரட்சிக்கு எந்தவிதத் தலைமையும் கிடையாது. முன்கூட்டியே திட்டமிடவோ, கோரிக்கைகளை முன்வைத்து அறிவிப்போ கிடையாது. மக்களின் ஏகோபித்த குரல் - ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டும் என்பது மட்டுமே!
 
மேற்காசியா முழுவதும் ஒன்றன்பின் ஒன்றாகப் பரவத் தொடங்கி இருக்கும் இந்த மக்கள் எழுச்சியின் பின்னணி வியப்புக்குரியது. நம்ப முடியாதது. டுனீஷியாவில் காவல் துறை ஓர் இளைஞரை நியாயமற்ற முறையில் துன்புறுத்தியதைத் தொடர்ந்து அவர் இறந்துவிட்டார்.
தனது மகனின் மரணத்துக்குக் காரணமான காவல்துறைக்கு எதிராக வெகுண்டு எழுந்தார் அவரது தாய். தொலைக்காட்சிச் சேனல்களிலும், இணையதளத்திலும் வெளியானதைத் தொடர்ந்து அந்தத் தாயின் போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு வலுத்தது.
 
அந்தத் தாயைப்போலவே பாதிக்கப்பட்டிருந்த பலரும் தெருவில் இறங்கி அராஜக ஆட்சிக்கு எதிராகப் போராடத் தொடங்கினார்கள். விளைவு? டுனீஷியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
 
டுனீஷியாவில் மகனை இழந்த ஒரு தாயின் கண்ணீர்தான் இன்று மேற்கு ஆசியாவின் சர்வாதிகார ஆட்சியாளர்களை ஒருவர்பின் ஒருவராகத் துடைத்து அகற்றும் படையாக, ஒரு சுனாமியாக உருவெடுத்திருக்கிறது. டுனீஷியா, எகிப்து, ஜோர்டான், பாலஸ்தீனம், லெபனான், அல்ஜீரியா என்று ஒன்றன்பின் ஒன்றாக, "ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி" என்று பாரதி கூறுவானே அதுபோல காட்டுத் தீயாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
 
எகிப்து நாட்டில் சர்வாதிகார ஆட்சி அகற்றப்பட்டு அதிகாரம் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ராணுவம் அடுத்த ஆறு மாதங்களில் முறையான தேர்தலை நடத்தி, மக்கள் மன்றத்தின் தீர்ப்புக்கேற்ப, ஜனநாயக ஆட்சியை நிறுவ வாக்குறுதி அளித்திருக்கிறது.
 
சில சந்தேகங்கள் எழத்தான் செய்கின்றன. ராணுவத்தின் உயர் அதிகாரிகள் அனைவரும் ஹோஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்குத் துணை நின்றவர்கள். ஊழல், வியாபாரத் தொடர்புகள் என்று கறைபடிந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்கள். இவர்களிடம் கைமாறி இருக்கும் ஆட்சியை, இந்தப் பழம் பெருச்சாளிகள் கைநழுவ விடுவார்களா என்பது   பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.
 
அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகள், தாங்கள் உருவாக்கி இருக்கும் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு மேற்கு ஆசியாவிலுள்ள எந்த ஆட்சி மாற்றமும் அச்சுறுத்தலாகிவிடக் கூடாது என்பதில்தான் குறியாக இருக்கும். மேலும், எண்ணெய் வளம் மிக்க மத்திய ஆசியாவைத் தங்களது பிடியிலிருந்து நழுவவிடுவதையும், மக்களாட்சியின் மூலம் தங்களுக்குக் கைப்பாவையாகவும், தங்களுடன் ஒத்துழைப்பவராகவும் இல்லாத தலைமை ஏற்படுவதையும் இந்த மேலைநாடுகள் விரும்பாது.
 
ஹோஸ்னி முபாரக்கை அகற்றிவிட்டு ராணுவ ஆட்சி ஏற்படுவதைத்தான் அமெரிக்கா ஆதரிக்கிறதே தவிர, ஐ.நா.வின் மேற்பார்வையில் தேர்தல் நடத்தி மக்களாட்சியை நிலைநிறுத்த உதவவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
 
எழுச்சியின் பலத்தை மேற்காசிய மக்கள் புரிந்துகொண்டு விட்டனர். ஆட்சி மாற்றம் காட்சி மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் மீண்டும் தெருவில் இறங்கிப் போராட முடியும் என்கிற தைரியம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அதுவே போதும்.
 
நல்லாட்சி இல்லாமல் போனால், மேற்காசியாவில் ஏற்பட்டிருப்பதுபோன்ற எழுச்சி இனி உலகின் எல்லா பகுதிகளிலும் எழத்தான் போகிறது. ஒரு தலைவர் இல்லை என்பதால் போராட்டங்கள் எழுவது தடைபடாது என்பதையும், மக்கள் தீர்ப்புக்கு எதிராகவும், அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமலும் உலகின் எந்தப் பகுதியிலும் இனி "சுயநல' ஆட்சியாளர்கள் பதவியில் தொடர முடியாது என்பதையும் உணர்த்தி இருக்கிறது எகிப்தில் எழுந்த யுகப் புரட்சி!

Wednesday 3 November 2010

நிமிர்ந்த நன்னடை. நேர் கொண்ட பார்வை. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்.

தினமணி தலையங்கம்: இதுவல்ல நல்லாட்சி!

ஓர் அரசின் அடிப்படைக் கடமை மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுதான். சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது என்பது, போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதும், தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்வதும் மட்டுமல்ல, சராசரிக் குடிமகனின் அன்றாட வாழ்க்கை நிம்மதியாகக் கழிவதற்கும், அவரவர் தத்தம் வேலைகளை எந்தவிதத் தடையோ, இடையூறோ இல்லாமல் தொடர்வதற்கு வழிகோலுவதும்தான்.


பெருகிவிட்ட மதுபானக் கடைகளும், தெருவுக்குத் தெரு, வட்டத்துக்கு வட்டம், பகுதிக்குப் பகுதி, மாவட்டத்துக்கு மாவட்டம் ரவுடி சாம்ராஜ்யத்தை நடத்தும் அரசியல் கட்சிகளால் ஆசிர்வதிக்கப்பட்ட சமூக விரோதக் கும்பல்களும், சராசரிக் குடிமகனின் அடிப்படைப் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கிவிட்டிருக்கின்றன.


சென்னையில் மட்டுமே ஆரம்பத்தில் காணப்பட்ட "கட்டைப் பஞ்சாயத்து' தாதாக்கள் இன்று தமிழகத்தின் சிறு நகரங்களில்கூடக் காளான்களாகப் பெருகிவிட்டிருக்கின்றனர். தெருவில் மணலும் செங்கல்லும் வந்து இறங்கினால் "மாமூல்' வசூலிக்க வார்டு உறுப்பினரிலிருந்து, தாதா கும்பல்வரை நடத்தும் அடாவடி மிரட்டல்களும், அத்துமீறல்களும், சட்டம் செயலிழந்துவிட்டதைத்தானே எடுத்துரைக்கிறது.


அதையெல்லாம்கூட சகித்துக் கொள்ளலாம். தைரியமாகப் பெண்கள் நடமாட முடியவில்லை, வயதானவர்கள் தனியாக வாழ முடியவில்லை, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை என்கிற நிலைமை ஏற்பட்டால் அதையும், ஆட்சியாளர்களைத் தவறாகத் தேர்ந்தெடுத்தற்காகத் தலையெழுத்தே என்று ஏற்றுக்கொள்ளவா முடியும்?


சமீபகாலமாகப் பணத்துக்காக குழந்தைகளைக் கடத்தும் செயல்கள் அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது காவல்துறை செயல்படுகிறதா இல்லையா என்கிற சந்தேகம் ஏற்படாமல் இல்லை. சில தினங்களுக்கு முன்பு கோவையில் ஒரு தொழிலதிபரின் இரு குழந்தைகளைக் கடத்திச் சென்று அந்த ஓட்டுநர், ஆற்றில் தள்ளிக் கொலை செய்திருக்கிறார். சிறுமியின் சடலம் கிடைத்து அந்தக் குழந்தையின் இறுதி ஊர்வலத்துக்குத் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தாலே மக்கள் மத்தியில் இந்தச் சம்பவம் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது என்பது புரிந்தது.


சிறுமியுடைய தம்பியின் சடலமும் மறுநாள் மீட்கப்பட்டது. போலீஸ் தன்னைப் பிடித்துவிடும் என்று பயந்து கொலை செய்ததாக ஓட்டுநர் கூறியுள்ளார். அவர் மட்டும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரண் அடைந்து, குழந்தைகளை ஒப்படைத்திருந்தால், அதிகபட்சம் ஏழு ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்திருக்கும். குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருப்பர். சரண் அடைந்த ஓட்டுநரை, பெற்றோரே கூட வழக்கில் தீவிரம் காட்டாமல் மன்னித்திருக்கக் கூடும். அதன்மூலம் அந்த ஓட்டுநரின் குடும்பமும் தலைகுனிந்து வாழும் அவலநிலை ஏற்பட்டிருக்காது.


சென்னை முகப்பேரில் தனியார் பள்ளியில், 9-ம் வகுப்புப் படிக்கும் மாணவர் திங்கள்கிழமை மாலை கடத்தப்பட்டுள்ளார். சிறுவனின் தந்தை கிரானைட் தொழில் செய்கிறார். இதுவும் பணத்துக்காக நடத்தப்பட்ட கடத்தல்தான் என்று தெரிகிறது.


கடந்த ஜூன் மாதத்தில் எம்.எல்.ஏ. ஒருவரின் குழந்தைகள் இருவர் ஒரு வார இடைவெளியில் கடத்தப்பட்டனர். உடனே அவர்கள் மீட்கப்பட்டனர். இந்த வேகம் மற்றவர் விஷயங்களில் இல்லாமல் போவது ஏன் என்று பெற்றோர் தரப்பில் கேள்வி எழுப்புகின்றனர்.


சொத்துகளைப் பறிப்பதற்காக அரசியல்வாதிகளும், ரவுடிகளும் இதுபோல ஆள்கடத்தலைத் தொடங்கி வைத்தார்கள். அவ்வாறு புகாரில் சிக்கி கைதானவர்கள் மீதான வழக்குகள் இன்னும் முடியவில்லை. குற்றவாளிகளின் அரசியல் பின்புலம் காரணமாக, இதுபோன்ற ஆள்கடத்தலில் ஈடுபடுவோரை ஒடுக்க காவல் துறையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் படுவதில்லையோ என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.


கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை சென்னையில் மட்டும் 29 கடத்தல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இவை போலீஸ் வழக்குப் பட்டியலில் வந்திருப்பவை. வழக்கிற்கு வராமல் சம்பந்தப்பட்டவர்களே பைசல் செய்து கொண்டவை இரண்டு, மூன்று மடங்கு அதிகம் இருக்கலாம் என்று காவல் துறையினரே ஒப்புக் கொள்கின்றனர்.


மணல் கடத்தல், அரிசி கடத்தல், கிரானைட் கற்கள் கடத்தல் இவையெல்லாம் போதாதென்று, கந்துவட்டிக் கும்பலும், கட்டைப் பஞ்சாயத்து கோஷ்டிகளும், கேள்வி கேட்க யாருமில்லாமல் வளைய வருவதுதான், அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தின் இன்றைய நிலைமை. இந்த மாஃபியாக்கள் அனைத்துமே ஏதாவது அரசியல் பின்புலத்தில்தான் இயங்குகின்றன என்பது ஊரறிந்த ரகசியம்.


அரசியல்வாதிகளுடன் சமூகவிரோதிகள் கைகோத்துச் செயல்படுவது தடுக்கப்படாவிட்டால், இங்கே தீவிரவாதம் தலைதூக்காமல் போனாலும், திரைப்படங்களில் காட்டுவதுபோல வெட்டரிவாளும், வீச்சரிவாளும், ஆசிட் பல்புகளும், நாட்டு வெடி குண்டுகளும் கோலோச்சத் தொடங்கும்.


இரு தினங்களுக்கு முன்பு சென்னை கொளத்தூரில் ஒரு பெண்ணை அடித்து, கையைப் பிடித்து மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்ற இளைஞர்கள் பற்றி போலீஸில் புகார் தரப்பட்டது. மோட்டார் சைக்கிளின் எண் தவறாக உள்ளது என்று கூறி அவர்களை இன்னும் போலீஸôரால் பிடிக்க முடியவில்லை. அந்த இளைஞர்கள் யாருக்குச் சொந்தமோ? யாருக்கு நெருக்கமோ? நமக்கென்ன தெரியும்?


அம்பத்தூர் நகராட்சி கவுன்சிலர் ஒருவரின் மகன் கடந்த மாதம் மாநகரப் போக்குவரத்து ஓட்டுநரை அடித்தாரே, கவுன்சிலர் மீது கட்சி என்னதான் நடவடிக்கை எடுத்தது? வாரிசுகளின் கொட்டத்தை அடக்கக் கட்சித் தலைமை ஏன் தயங்குகிறது?


முந்தைய ஆட்சியில் நடக்கவில்லையா என்று கேட்பதோ, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது இது குறைவுதான் என்று கூறுவதோ இதற்குச் சமாதானம் ஆகிவிடாது. முந்தைய ஆட்சியில் தவறுகள் நடந்ததால்தானே அந்த ஆட்சி மக்களால் அகற்றப்பட்டு இன்றைய ஆட்சியாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.


அங்கே நடக்கவில்லையா? இங்கே நடக்கவில்லையா? என்று புள்ளிவிவரங்களை அடுக்கி வாய்ப்பந்தல் போடுவதன்மூலம் பிரச்னையைத் திசைதிருப்பாமல், சீர்கெட்டுக்கிடக்கும் சட்ட ஒழுங்கு சூழ்நிலையை சீர்திருத்தாவிட்டால், இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிவதற்கு வேறு காரணம் எதுவுமே தேவையில்லை. அரிசி கொடுத்தது, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்தது, காப்பீட்டுத்திட்டம், கான்கிரீட் வீட்டுத் திட்டமெல்லாம், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியாத அரசுக்குத் தேர்தலில் கை கொடுக்காது என்பதுதான் கடந்த காலம் உணர்த்தும் உண்மை!



தினமணி  மக்களுக்கான பத்திரிகை என்பதற்கு உதாரணமான தலையங்கம்.

Monday 25 October 2010

இனிமையான இல்லறத்திற்கு....

விவாகரத்துகள் பெருகி வரும் இக்காலகட்டத்தில் விவாகரத்து கோரி தம்பதிகள் நாடி வரும் சென்னை குடும்ப நலகோர்ட்டில், இனிமையான இல்லறத்திற்கு என்று தலைப்பில் 10 அறிவுரகளை பெரிய போர்டில் எழுதி வைத்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

சென்னை குடும்ப நல கோர்ட்டின் முதன்மை குடும்ப நல கோர்ட்டு வளாகத்திலும், முதலாவது மற்றும் இரண்டாவது குடும்ப நல கோர்ட்டு வளாகத்திலும் இந்த போர்டு வைக்கப்பட்டுள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள அறிவுரைகள்:

1. ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள்.

2. வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே!

3. விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.

4. கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.

5. உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.

6. விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.

7. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள்.

8. செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள்.

9. இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந்திரங்கள்.

- சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல்
- அனுசரித்துப் போகுதல்
- மற்றவர்களை மதித்து நடத்தல்.

மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ள 10வது அறிவுரை.

விவாகரத்து கோரி வரும் தம்பதிகள் இந்த பத்து அறிவுரைகளையும் ஒரு பத்து நிமிடம் ஆற அமர நின்று ஒன்றுக்கு இரண்டு முறை படித்தாலே போதும், 'டைவர்ஸ்' கேட்டு வரும் ஜோடிகள் 'டைவர்ட்' ஆகிச் செல்லும் வாய்ப்பு உருவாகும்.

Thursday 14 October 2010

மெய் "சிலி'ர்க்கிறது! - தினமணி தலையங்கம்

கனிமச் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டு கடந்த 69 நாள்களாக மண்ணுக்குள் புதையுண்டு கிடந்த 33 பேரை மீட்கும் பணியை சிலி நாட்டின் அரசு வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. முதல்நாளில் 13 பேர் மீட்கப்பட்டனர். ஒவ்வொருவரும் குழல்உறையிலிருந்து வெளிப்பட்டபோது, மக்களின் ஆனந்தக் கண்ணீர் சுரங்கத்தின் உள்ளே அடுத்ததாகக் காத்திருக்கும் நபர்களையும் தொட்டிருக்கும்!
 

 இந்த மீட்புப் பணியில் மிகவும் பாராட்டுக்குரிய விஷயம், ஒரு சிறிய நாடான சிலி, இந்த 33 பேரை மீட்பதில் காட்டிய அக்கறைதான். ஒரு நாடு முழுவதும் இவர்களது மீட்புக்காகக் காத்திருந்தது என்றால் மிகையில்லை. சுரங்கத்திலிருந்து குழல்உறை மூலம் முதல் சுரங்கத் தொழிலாளி ஃபிளோரன்சியா அவலோஸ் வெளியே வந்தபோது, அங்கே காத்துநின்ற அந்நாட்டின் அதிபர் கட்டித் தழுவி வரவேற்றார். உலகம் முழுவதும் சிலி நாட்டின் விடா முயற்சியைப் பாராட்டாமல் இல்லை.


 ஆகஸ்ட் 5-ம் தேதி தாமிரக் கனிமச் சுரங்கத்தில் 700 மீட்டர் ஆழத்தில் இவர்கள் இருந்தபோது சுரங்கம் முழுதுமாக மூடிக் கொண்டது. சுரங்கத் துறை அமைச்சரே இவர்கள் இறந்துவிட்டிருப்பார்கள் என்று அறிவித்த பிறகும், அவர்கள் உயிருடன் இருப்பதாகத் தனது உள்ளுணர்வு சொல்கிறது என்று பல இடங்களில் சிறுதுளை போட்டுப் பார்த்த அதிபர் செபாஸ்டின் பினேராவை எத்தனை பாராட்டினாலும் தகும்.


 சிறுதுளைக் குழல்களை பல இடங்களிலும் உட்செலுத்திப் பார்த்துக்கொண்டிருந்தபோது, 17-வது நாளில் அதன் முனையில், ரப்பர் பேண்டு சுற்றப்பட்ட ஒரு தகவல் கடிதம் வந்தது: நாங்கள் 33 பேரும் உயிருடன் இருக்கிறோம் என்று.


 அதன் பிறகு சிலி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அற்புதமானவை. அந்தச் சிறுதுளை வழியாக அவர்களுக்கு குடிநீர், திரவ உணவு, மருந்து மாத்திரைகள், உறவுகளின் அன்புக் கடிதங்கள், மனம் தளராமல் இருக்கும் உளவியல் ஆலோசனைகள் என எல்லாவற்றையும் உள்ளே அனுப்பி வைத்து, நம்பிக்கை அளித்து, மீட்புப்பணிகளை முடுக்கி விட்டார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய அளவிலான ஆழ்துளைகள் போட்டனர். அந்தத் துளைகள் வழியாக இவர்களை வெளியே கொண்டுவர தனித்துவமான குழல்உறைகள் செய்தனர். மிகப்பெரும் செலவை எதிர்கொண்டுள்ளது சிலி அரசு.


 இதில் பாராட்டுக்குரிய மற்றொரு விஷயம், சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்ட 33 பேரின் மனஉறுதி. தாங்கள் உள்ளே உயிருடன் இருக்கிறோம் என்ற தகவலை அனுப்பி, தங்களுக்கு நீரும் உணவும் கிடைக்கும் வரை அவர்கள் அனைவரும் தங்களிடம் இருந்த உணவு, நீரை ரேஷன் முறையில் சாப்பிட்டு, உயிரைக் காத்து வந்துள்ளனர்.


 வெளியேறும்போது யார் முதலில் என்ற கேள்விக்கு, தங்களில் திறமையானவரும், எந்தச் சிக்கலிலும் மனஉறுதி தளராதவருமான ஃபிளோரன்சியா அவலோûஸ தேர்வு செய்துள்ளனர். ஏனென்றால், 700 மீட்டர் ஆழத்திலிருந்து குழல்உறை மேலே செல்லும்போது மீண்டும் மண்சரிவு, அல்லது பாறை அழுத்தத்தில் சிக்கிக் கொள்ள நேரிட்டால் அந்தச் சூழலில் மனம் தளராமல் இருப்பார் என்பதால் அவரைத் தேர்வு செய்துள்ளனர்.

 இந்தச் சம்பவம் இரண்டு விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது. ஓர் அரசு நினைத்தால், களத்தில் இறங்கி நின்றால் யாரையும் காப்பாற்ற முடியும். இரண்டாவதாக, நாம் பயன்படுத்தும் பல்வேறு கனிமப் பொருள்களுக்காக எத்தகைய துயரங்களை பெயர்தெரியாத மனிதர்கள் சந்திக்க நேர்கிறது என்பதும் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பதும்தான்.


 நெய்வேலி போன்ற திறந்தவெளிச் சுரங்கங்களில் விபத்துகளும் உயிரிழப்புகளும் மிகக் குறைவு. ஆனால் மண்ணைக் குடைந்து செல்லும் சுரங்கங்களில்தான் விபத்துகள் மிக அதிகம். திடீரென மண்சரிவு அல்லது பாறை விழுந்து வழிஅடைத்தல், அல்லது விஷவாயு வெளிப்படுதல் என சுரங்கத் தொழிலாளர்கள் பல விபத்துகளுக்கு ஆளாகின்றனர்.

 என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கைக் கருவிகள் இருந்தாலும் சுரங்கங்களில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை.


 2010-ம் ஆண்டில் இதுவரை 59 சுரங்க விபத்துகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் பெரும் விபத்து வெர்ஜீனியாவில் நடந்தது. 27 பேர் இறந்தனர். சிலி, சீனா, அமெரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இத்தகைய சுரங்கங்கள் அதிகமாக இருக்கின்றன.


 1907-ம் ஆண்டு அமெரிக்க சுரங்க விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை 3,242 ஆக இருந்தது. 2009-ம் ஆண்டு 18 ஆகக் குறைந்துள்ளது. இத்தகைய விபத்துகள் சீனாவில் அதிக அளவில் நடைபெறுவதாகவும் ஆனால் அந்த மரணங்கள் பதிவு செய்யப்படுவது மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது. சென்ற ஆண்டு சீன அரசு அறிவித்த சுரங்க விபத்து மரணங்கள் 2000-க்கும் அதிகம்.


 இன்றைய தொழிலாளர்கள் சாலைகளில் இறப்பதைக் காட்டிலும், குறைந்த எண்ணிக்கையில்தான் தொழிற்சாலை மற்றும் சுரங்க விபத்துகளில் இறக்கின்றனர் என்பது படிப்பதற்கு ஆறுதலாக இருக்கலாம். ஆனால், உயிருக்கு விலை உண்டா என்ன? ஒரு தொழிலாளிக்கு ஒரு நாடு கொடுக்கும் மிகப் பெரும் மரியாதை, அவனைக் காப்பாற்றுவதற்காக எதையும் செய்யத் துணிவுகொள்ளும் மனநிலைதான். சிலி, நம்மை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.

Tuesday 5 October 2010

எந்திரன்கள் செய்யும் மந்திரங்கள்....






இயக்குனர் சங்கர் சொன்னார் என் கனவு

தயாரிப்பாளர் கலாநிதி சொன்னார் இது ரஜினிக்காக

ஹீரோ ரஜினி சொன்னார் என் ரசிகர்களுக்காக

மொட்டை அடித்து, கெடா வெட்டி, பால் குடம் தூக்கி, அலகு குத்தி

வெற்றியை உறுதி செய்தனர் தலைவருக்காக

200 கோடிக்கு மேல் வசூல்,  மாபெரும் வெற்றி ! ! ! !



அதிகாலை 5 மணிக்கு சிறப்பு காட்சி பார்த்தார் முதல்வர்

மிரட்டிட்டீங்க ரஜினி என்று பாராட்டினார்

தயாரிப்பாளர் பற்றி நிருபர் கேட்க - முதல்வர் சொன்னார்

என்னைப் பற்றி நானே எப்படி சொல்வது ? ? ? ?