Sunday, 4 January 2009

ஒரு நிமிடத் தேர்வு.

நேரத்தைப் பயன்படுத்துவதில் நீங்கள் எப்படி? வல்லவரா? பின்தங்கியவரா? உங்களுக்கு ஓர் ஒரு நிமிடத் தேர்வு.

என் இயல்புகள்
1. என்னால் குறித்த நேரத்தில் வேலைகளை முடிக்க முடிகிறது.

2. நிகழ்ச்சிகளுக்கு என்னால் குறித்த நேரத்தில் செல்ல முடிகிறது.

3. வேலைக்கு / தொழில் இடத்திற்கு நான் சரியான நேரத்திற்கு செல்வது உண்டு.

4. குடும்பத்திற்கெனப் போதுமான நேரம் ஒதுக்குவது உண்டு.

5. நான் எப்போதும் பரபரப்போ டென்ஷனோ அடைவது இல்லை.

6. மற்றவர்களின் வேலைகளையும் நான் எடுத்துச் செய்வது உண்டு.

7. தூக்கத்திற்கு நான் முக்கியத்துவம் தருவது இல்லை.

8. பார்க்கவேண்டிய பல கடமைகளையும் பல பொறுப்புக்களையும் நான் சரிவர முடித்துவிடுகிறேன்.

9. பணத்தைவிட நேரமே முக்கியம் என்று கருதுகிறேன்.

10. என் எதிர்காலம் குறித்தும் இலட்சியங்கள் குறித்தும் நான் தெளிவாக இருக்கிறேன்.

11. உடல்நலத்திற்கென நான் தினமும் சிறிது நேரமாவது செலவழிக்கிறேன்.

12. திருமணம், மரணம், பிற சமூக நிகழ்வுகளில் நான் முடிந்தவரை தவறாது கலந்து கொள்கிறேன்.

கேள்விகளைக் கவனமாகப் படியுங்கள். அவற்றில் வேண்டு மென்றே பொடி வைத்திருக்கிறேன். `ஆம்' என்றால் மட்டும் டிக் செய்யுங்கள். `இல்லை' என்றால் விட்டு விடுங்கள்.

`ஆம்'கள் 5க்கும் கீழா? ஊகும்! உங்களைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை; சாரி!

5 முதல் 7 `ஆம்'களா? போதாது. இன்னும் சில `ஆம்'களைப் பெற்று மேலே வாருங்கள். 8 முதல் 11 ஆம்களா? தேறிவிட்டீர்கள்.

என்னது! 12 `ஆம்'களா? பெப்சி, கொக்கோகோலா நிறுவனத்தில் தலைமைப் பதவியைக் கேட்டு வாங்குங்கள்!

மனித வாழ்வின் இயந்திரப் பிரதிநிதிகள் கடிகாரமும் நாட்காட்டிகளும்தாம். இவற்றில் அலட்சியம் காட்ட வேண்டாம்..

No comments: