(Shopping) கடைக்கு சென்று அடுத்த வாரத்துக்கு தேவையான மளிகை சாமான்கள், காய்கறிகள் வாங்குவது வழக்கம்.
நேற்று நாங்கள் கிளம்பும் பொது, என் மனைவி சொன்னா, ஏங்க இங்க தான் (Swine Flu) பன்றி காய்ச்சல் இருக்கே, வெளியே போகும்போது நாம ரெண்டு பேரும் முகத்துக்கு Mask போட்டுக்கலாம்னு சொன்னா. நான் சொன்னேன் அதெல்லாம் நமக்கு வராது, இந்த மாதிரிஎல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காதேன்னு சொல்லி Taxi இல் ஏறி சென்று கொண்டிருக்கும்போது என் மனைவிக்கு லேசான சாதாரண இருமல் வந்தது.
வண்டி ஒட்டிகிட்டிருந்த டிரைவர் திடீரென்று பதட்டமாகி அவன் பாக்கெட்டிலிருந்து ஒரு Mask எடுத்து அணிந்து கொண்டான். நான் என் மனைவிக்கிட்ட சொன்னேன், பாரு உனக்கு காய்ச்சல் இருக்குமோனு நினைத்து அவன் Mask மாட்டிகிட்டான்.
என் மனைவி உடனே டென்ஷன் ஆகி என்னை முறைத்தால். பொதுவாக Mask போடுவதை அசிங்கமா நினைக்காம, நம்முடைய பாதுகாப்புக்காக போடறது நல்லது தானே.
கடைக்கு சென்றவுடன் என் மனைவி ஒரு தடவைக்கு நாலு தடவை விலை எல்லாம் சரி பார்த்து எல்லா தேவையான பொருட்களையும் வாங்கிகிட்டு பணம் செலுத்த சென்று கொண்டிருக்கும் பொது
ஒரு தொலைகாட்சியில் மைக்கல் ஜாக்சன் பாட்டும் நடனமும் சென்று கொண்டிருந்தது. நான் அவசர அவசரமாக அந்த கடை ஊழியரிடம் அந்த (DVD ) கேசெட் விலையை கூட விசாரிக்காமல் வாங்கி விட்டேன். பின்னர் தான் தெரிந்தது அதன் விலை 400 பாட் என்று. கிளம்பும்போது இதை கவனித்து விட்ட என் மனைவி அதிர்ச்சியாகி, ஏங்க எப்படி பணத்த தேவை இல்லாம செலவு பண்றிங்க என்று ஆரம்பித்து ஒரு சில நிமிடத்தில் நான் இதுவரைக்கும் என்ன என்ன தேவை இல்லாம செலவு செஞ்சேன் என்பதை எல்லாம் வரிசை படுத்தி சொல்ல அரம்பித்து விட்டால்.
எனக்கும் வாங்கின பிறகு தான் தெரிஞ்சது விலை கொஞ்சம் அதிகம் தானோ என்று. சில நிமிட மௌனத்திற்கு பிறகு, நான் சொன்னேன், கொஞ்சம் அவசர பட்டுடேனோ, பின்னர் இருவரும் அந்த காசெட்டை திருப்பி கொடுத்து விட்டு பணத்தை திரும்ப பெற்று கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
இந்த மாதிரி தெரியாம அவசர படர நேரத்தில் நம்ம கூட யாராவது இருந்து அடிக்கடி சரி பண்ணிகிட்டே இருக்க வேண்டியிருக்கு.
மீண்டும் சிந்திப்போம்.
- சூரியபிரகாஷ். வா
No comments:
Post a Comment