Monday 27 July 2009

நட்பு....

உண்மையான நண்பன் என்பவன் உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுபவன். அதன் பிறகும், முன்பை போலவே உங்களிடம் பிரியமாக இருப்பவன்.

பொதுவாக நண்பர்களுக்கு மத்தியில் விமர்சனங்களை தாங்கும் மனோபாவம் குறைவாகவே இருக்கின்றது. மனிதர்கள் அறிந்தும் அறியாமலும் செய்கிற தவறுகள் ஏராளம். உரிய நேரத்தில் அதை அறிந்து சரி செய்யாமல் விடும் போது அதற்காக விலை மதிக்க முடியாத நட்பை இழக்க வேண்டியும் வருகிறது.

விமர்சனம் செய்பவர் நாகரிகமாக தன் கருத்தை நண்பருக்கு சொல்லும்போது, அதை அதே முறையில் அவரும் அணுகி ஏற்று கொள்ளும்போது ஒரு ஆரோக்கியமான நட்பு வளருகிறது. இதில் கருத்தை சொல்லும் விதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

அதே சமயம் , கடுமையான வார்த்தை பிரயோகங்கள் தவிர்க்க படவேண்டும். நண்பருக்கு அவருடைய தவறை சுட்டி காட்டுவது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும். இதை பயன்படுத்தி அவர் மனதை நோகடிக்கக்கூடாது.

மனமென்பது விளைச்சல் நிலம். நீங்கள் அதில் விதைக்கும் உணர்வுகள் எப்படிப்பட்டவை என்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். எந்த அளவு, மகிழ்ச்சியான, சந்தோசமான உணர்வுகளை விதைகிறேர்களோ அந்த அளவுக்கு சுவையான பழங்கள் கிடைக்கும்.

மீண்டும் சிந்திப்போம்....

-சூரியபிரகாஷ். வா

No comments: