Saturday 11 July 2009

உண்ணாவிரதம்....

இந்தியாவைப் பொறுத்தவரை, உண்ணாவிரதம்என்பது மிகவும் பழக்கமான வார்த்தை. அரசியல் தலைவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட இந்தஉண்ணாவிரதத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றால், சாதாரண மக்கள்மத ரீதியான காரணங்களுக்காக உண்ணா நோன்பு இருக்கிறார்கள். ஆனால், மருத்துவ ஆலோசனையுடன் சில நாட்கள் சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது என்றவிஷயம் எத்தனை பேருக்குத் தெரியும்?

உண்ணாமல் இருந்தால் உடல்நலம் கெட்டுவிடும் என்ற பயம் பலருக்கு இருக்கிறது. உண்மையில் நோயற்ற ஒரு மனிதரால்50 முதல் 75 நாட்கள் சாப்பிடாமல் உயிருடன் இருக்க முடியும். காரணம், மனிதஉடலில் இருக்கும் ஒவ்வொரு பவுண்டு கொழுப்பும் சுமார் 3,500 கலோரிகளுக்குஇணையானது. நீங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்தால்கூட கூடுதலாக ஒரு பவுண்ட் கொழுப்புபோதுமானது.

உண்ணாவிரதம் இருக்க நினைத்தால், உடனடியாகஒரு மருத்துவரைக் கலந்தாலோசித்து, அவரது கண்காணிப்பின் கீழ் இதை மேற்கொள்வது நல்லது. உண்ணா விரதத்தை ஆரம்பித்த பிறகு, முதல்சில நாட்கள் மிகக் கடுமையானவை. இந்த நாட்களில்பெரும் அளவிலான கழிவுப் பொருள்கள் உடலில் இருந்து ரத்தத்தில் கலக்கும். வியர்வைத்துவாரங்கள் உள்பட உடலின் எல்லா பாகங்களிலும் இருந்து இவை வெளியேறும். சில தடவைகள் சாப்பிடாமல்இருந்தால், நாக்கின் மீது வெண்ணிறப் படிவும் படிவது இதனால்தான்.

உண்ணா நோன்பு தொடரும்போதுஇந்த சுத்தப்படுத்தப்படும் பணி தீவிரமடையும். உடலில் இருக்கும் கொழுப்பு குறையும்.இறந்த செல்கள் வெளியேற்றப்படும். ஒருவர் பல நாட்கள் சாப்பிடாமல் இருக்கும்போது, உடலின்செல்களில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருள்கள்கூட அகற்றப்படும். நோயுற்ற செல்கள்,இறந்த செல்கள், குடலின் உட்சுவரில் படிந்திருக்கும்அழுத்தமான திசு சுவர், ரத்தம், கல்லீரல்,சிறுநீரகம் ஆகிய பொருள்களில் இருக்கும் நச்சுப் பொருள்கள் உடலில் இருந்துவெளியேறும். உடலில் இருக்கும் நச்சுப் பொருள்கள் குறைந்ததும் ஒவ்வொரு செல்லின் திறனும்மேம்படும். இதனால், நோயுற்றஉடல் சீக்கிரம் குணமாகும்.

கூர்மையாகக் கவனித்துப்பார்த்தால், உண்ணா நோன்பு இருப்பவர்கள் அதற்குப் பிறகு மிகவும் உற்சாகமாகவும்இருப்பார்கள். பசி எடுப்பதும் அவர்களுக்குக் குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் இருக்கிறது.உணவைச் செரிக்க உடலுக்கு மிகுந்த சக்தி தேவைப்படுகிறது. உண்ணா நோன்பு இருக்கும்போதுஉடலின் செரிமான உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. இப்படி சேமிக்கப்படும் சக்தி உடலைச் சரிப்படுத்தும்பணிகளுக்குச் செலவிடப்படுகிறது. குடல் சுத்தம் செய்யப்படுவது, ரத்தம், செல்களில் இருக்கும் நச்சுப் பொருள்கள் வெளியேற்றப்படுவதாலும்உடல் பல கோளாறுகளிலிருந்து தன்னைச் சரி செய்து கொள்கிறது. உண்ணா நோன்பு இருந்தால்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக அதிகரிக்கும். உடல், மன நலம் அதிகரித்து உடம்பே புத்துணச்சி பெறும்.

சாப்பிடாமல் இருப்பதால்என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

1. நம்முடைய வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வதன் மூலமாகவே பல்வேறு உடல் நலக் கோளாறுகளிலிருந்து விடுபடலாம்.அதனால்,ஒரு நிபுணரின் மேற்பார்வையில் குறிப்பிட்ட காலத்திற்கு உண்ணா விரதத்தைமேற்கொண்டால் உடல் நலம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும்.

2. காஃபீன், நிகோடின்,ஆல்கஹால் ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட உண்ணாநிலை மிகச் சிறந்தது. இவற்றை நிறுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகள்,சாப்பிடாமல் இருக்கும்போது மிகக் குறைவாக இருக்கும்.

3. சாப்பிடாமல் இருப்பதால், கொழுப்புகுறையும்.

4. குடலில் ஏற்படும்பல்வேறு குறைபாடுகளை உண்ணாநிலை சரி செய்யும்.

5. மருத்துவரின் கண்காணிப்பின்கீழ் உண்ணா விரதம் மேற்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. அந்த காலகட்டத்தில் அவர்கள் தேவையான வாழ்க்கை முறைமாற்றத்தையும் டயட் மாற்றத்தையும் மேற்கொள்ளலாம்.


6. உடலில் இருந்தும்ரத்தத்தில் இருந்தும் நச்சுப் பொருள்கள் வெளியேறுவதால் மனதில் சுறுசுறுப்பு அதிகரிக்கிறது.முடிவெடுக்கும் தன்மை கூர்மையடைகிறது. குறைவாகச்சாப்பிடுவதால் சக்தி சேமிக்கப்படுகிறது. இந்த சக்தியை சிந்திக்கும் பணிகளுக்குப் பயன்படுத்துகிறதுமூளை.

மதரீதியாக இந்த உண்ணா விரதத்தைமேற்கொள்பவர்களுக்கு இரட்டை பயன்கள் கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். அதாவது உடல்ரீதியான பலன்களும் மன ரீதியான பலன்களும். உலகில் பல நூற்றாண்டுகளாகவே இந்த உண்ணாவிரதப்பழக்கம் இருந்திருக்கிறது. அதனால்தான், பல மதங்களில் உண்ணாவிரதம் என்பதுஅந்த மதத்தின் வழிபாட்டிலேயே இருக்கிறது. இஸ்லாம், இந்து மதங்கள்இதைத் தீவிரமாக செயல்படுத்துகின்றன.

No comments: