Monday 16 March 2009

தானா சிட்டி அணி வெற்றி !!!!

கடந்த ஞாயிறு (15-March-2009) அன்று TCG மைதானத்தில் அதிகாலை பகல் ஆட்டமாக நடைபெற்ற பரபரப்பான 6 வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தானா சிட்டி அணி Bangkok அணியை எதிர்த்து விளையாடி 13 ரன்கள் வித்தியாசத்தில் வழக்கம் போல் வெற்றி பெற்று தொடரை 4/2 என்று முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக அணி தலைவர் ஜவஹர் வழக்கம் போல் டாஸ் வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அவருடன் நிதேஷ் ஆட்டத்தை துவக்கினார். ஆட்டத்தின் முதல் பந்தை எல்லை கோட்டை தாண்டி அடித்து நல்ல துவக்கம் தந்தார் ஜவஹர். இவர் அணியின் அதிக பட்ச ஸ்கோராக 37 ரன்கள் அடித்து நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தார். அதில் ஒரு இமாலய சிக்சரும் அடங்கும். அதிரடியாக 4 ரன்களுடன் ஆட்டத்தை துவக்கிய நிதேஷ் அடுத்த பந்திலேயே போல்டானார்.

அடுத்து களமிறங்கிய சுஜீ நிதானமாக ஆடினார். ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் என வலுவான நிலையில் இருந்த போது ஜவஹர் கீப்பிங் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து வந்த சூரியா முதல் பந்திலேயே க்ளீன் போல்டானார். தொடர்ந்து சுஜீயும் அவுட்டானார். இதனால் இந்த போட்டியில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற நினைத்த அணி தலைவர் ஜவஹர் கனவை நடுவரிசை ஆட்டக்காரர்கள் கலைத்தனர்.

இந்த சூழ்நிலையில் ஆட்டத்தை தொடர்ந்த இளங்கோ ஒரு சிறந்த ஆப் சைடு பவுண்டரியுடன் அணியின் ரன் ரேட் 6 புள்ளிகளுக்கு குறையாமல் பார்த்து கொண்டார். இவருடன் சமீர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து விளையாடினார். எதிர்பாராமல் அடித்த பந்து கேட்ச் ஆகி இளங்கோ வெளியேறினார்.

பின்னர் வந்த அதிரடி ஆட்டக்காரர் ரஜினி அனைத்து பந்துகளையும் விளாசி தள்ளினார். குறைவான பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ரஜினி தன்னுடைய அதிக பட்ச ஸ்கோரை பதிவு செய்தார். இவருடனும் கடைசி வரை சமீர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து விளையாடினார். 16 Over முடிவில் 6 wicket இழப்புக்கு தானா சிட்டி அணி 102 ரன்கள் எடுத்து கடந்த ஆட்டத்தின் அதே ஸ்கோரை பதிவு செய்தது.

பின்னர் விளையாடிய Bangkok அணி 8 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்து பரிதாபமாக தோல்வியுற்றது. ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் Bangkok அணியின் முக்கியமான ஆட்டகாரர் ஷான்பாக், சூர்யாவின் முதல் பந்திலேயே எதிர்பாராதவிதமாக க்ளீன் போல்டானார். தொடர்ந்து விளையாடி கொண்டிருந்த முரளி Bangkok அணியில் அதிக பட்ச ஸ்கோரை பதிவு செய்தார். இவர் கொடுத்த கேட்சை கணேஷ் அபாரமாக கேட்ச் செய்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

இந்த தோல்வியின் மூலம் அவர்களின் கார் ஓட்டும் கனவு சுக்கு நூறாக தகர்ந்தது. இது குறித்து அணியின் மூத்த ஆட்டக்காரர் காஸ்ட்ரோ குறிப்பிடுகையில் "எங்க கம்பெனியில இருக்கிற கார் பார்கிங்ல match நடந்தால் Bangkok அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறினார்"

பின்னர் ஆட்டத்தின் முடிவில் பேசிய அணி தலைவர் ஜவஹர் "Boys Played Well" Everyone fielded well, Special Thanks to all. Keep it up… என கூறினார்.

இந்த வெற்றியின் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் தானா சிட்டி அணி புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த அணி வீரர்கள் அனைவரும் ICC தர வரிசை பட்டியலில் முதல் 11 இடங்களை கைப்பற்றியுள்ளனர். தானா சிட்டி அணி ஒரு நாள், ஐந்து நாள், பத்து நாள் மற்றும் இருபது நாள் ஆட்டங்களின் தர வரிசை பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Anonymous said...

//// பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அணி தலைவர் ஜவஹர் "Boys Played Well" என கூறினார். இவர் கடந்த வாரம் முழுவதும் தூங்கமால் அணி வீரர்களை தயார் செய்தது குறிப்பிடத்தக்கது /////

ஆட்டம் முடிந்த பின்னும் அணி தலைவர் ஜவஹர் மற்றும் அணி துணை தலைவர் ரஜினி வெற்றி பெற்ற சந்தொசத்தில் துங்க முடியாமல் தவிப்பதாக தானா சிட்டி செய்தி குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.