Friday, 24 July 2009

என் வெற்றி - 1....

சில சமயம் வாழ்க்கை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் போற மாதிரி இருக்கும். சில சமயம் ரொம்ப மெதுவா, அமைதியாகவும் பொய் கொண்டிருக்கும். இதுக்கெல்லாம் நம்ம மனசு, குடும்பம், நண்பர்கள், அலுவலகம் போன்ற சூழ்நிலைகள் காரணமா அமைகிறது.

கடந்த மூன்று வாரமா ஞாயிற்றுகிழமை கிரிக்கெட் விறுவிறுப்பாகவும், நண்பர்களிடையே மிகுந்த உற்சாகமாகவும் பொய் கொண்டிருக்கிறது. இந்த மாதிரி ஆட்டங்களின் பொது ஒரு அணி முன்னிலை பெறுவதும், மற்றொரு அணி பின் தங்குவதும் இயற்கை. மறுபடியும் பின் தங்கிய அணி முன்னிலை பெரும்.

வாழ்க்கை ஒரு வட்டம், இதுல தோற்கிறவன் ஜெயிப்பான், ஜெயிக்கிறவன் தோற்பான் - இந்த வசனம் திருமலை படத்துல நடிகர் விஜய் சொன்னது.

வெற்றி தோல்விய சாதரணமாக எடுத்துக்கொளும் பாங்கு எல்லாருக்கும் எளிமையா வந்துடும்னு எதிர்பார்க்க முடியாது. வெற்றி பெறும்போது என்னால தான் இன்னிக்கு என் அணி வெற்றி பெற்றதுன்னு பெருமைய சொல்லற நிறைய பேர். அவங்க அணி தோற்கும் போதும் அதுக்கு தன்னை காரணமா சொன்னதா சரித்திரமே கிடையாது.

என் பத்தாவது வயதிலிருந்து நான் கிரிக்கெட் ஆடிகிட்டு வருகிறேன். அப்போதிலிருந்து நான் நிறைய தோல்விகளையும், குறைந்த வெற்றிகளையும் தான் சந்தித்திருக்கிறேன். சில நேரங்களில் என்னாலேயே சில ஆட்டங்களை தோற்றிருக்கிறோம். முக்கியமான நேரத்தில் கேட்ச் தவற விட்டு விடுவேன். அதிக ரன் எடுத்து ஜெய்க்க வேண்டிய ஆட்டத்தில் முதல் பந்திலேயே அவுட் ஆகிவிடுவேன். எதிர் அணி ஆறு பந்துகளில் பத்து ரன் எடுக்க வேண்டிய நிலையில் நான் பந்து வீசினால், எதிர் அணி எளிமையாக அந்த பத்து ரன்னை எடுத்து எங்கள் அணி தோற்கும்.

ஆட்டத்தின் வேறு சில போக்குகளாலும், இதர நண்பர்களுடைய மிக சிறிய தவறுகளும் இந்த தோல்விகளுக்கு காரணமாக இருக்கலாம். ஆனால், ஆட்டம் முடிந்து நண்பர்களுக்கு இடையேயான விவாதத்தில் ஒவ்வொருத்தனும் என்னை நோக்கி ஆயிரத்தெட்டு கேள்விகளை கேட்டு, என்னால தான் அன்றைய ஆட்டம் தோற்றதாக உறுதி படுத்தி விட்டு செல்வார்கள்.

இதே போல சில நேரங்களில் நான் அதிக ரன் எடுத்துஅல்லது விக்கெட் வீழ்த்தி என் அணி வெற்றி பெறும்போதோ, நண்பர்கள் விவாதம் இன்றைய ஆட்டம் சிறப்பாக இருந்ததற்கு எல்லோரடைய உழைப்பும், முயற்சியும் இருந்ததாக சொல்லி முடிக்கப்படும். (நெருங்கிய நண்பர்கள் வாழ்த்து மட்டும் இருக்கும்).

இதெல்லாம் எனக்கு மட்டும் ஏற்பட்ட , வாழ்க்கையில் நடந்த அனுபவமாக இருக்க முடியாது. எல்லா விளையாட்டு வீரனும் சந்தித்த, சந்தித்து கொண்டிருக்கிற அனுபவங்கள் தான்.

என் அனுவத்திலிருந்து நான் கற்றது, வெற்றி தோல்விகளை சமமாக பாவிக்க வேண்டும். வெற்றி பெறும்போது கொண்டாடுவதும், தோல்வியுறும்போது துவண்டு விடுவதும் நல்லதல்ல.

ஜெயித்தால் நல்லது! தோற்றால் அதை விட நல்லது! . தோல்விகள் தான் மனிதனை அடுத்த கட்ட வெற்றிக்கு வலிமையாக கொண்டு செல்கிறது.

மீண்டும் சிந்திப்போம்....

-சூரியபிரகாஷ்.வா

4 comments:

Anonymous said...

Good. continue.... keep it up

Unknown said...

Very Nice. . .
The Narration of the post is very good to read.
Except to start with the CRICKET :-)
Keep update. . . . .

Anonymous said...

Suriya,

It's very nice. I can understand your feelings and it reflects every ones heart.. sorry sorry not everyone there are somebody always say like(your words at paragraph 4).

Intha kathayil varum sambavangal anaithum karppanai illai.

There are many spelling mistakes in TAMIL(Thai Mozhi).

Regards,
Nerungiya Nanban

Unknown said...

Karuthu kandsamingalam appadithaan solluvan... naama eppovum polave irruppom.... Avan Evolo vegama antha ball a adichaan theriyuma.... athaan catch a vittuten..... Enna Koduma saravanan ithdu.....